"ஹலோ தலைவரே, மலேசியாவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்குதே?''”

"ஆமாம்பா, இந்த மூன்று நாள் மாநாட் டில், நம்ம ஆசிரியர் நக்கீரன் கோபால் கூட, ஊடகங்கள் குறித்து உரை நிகழ்த்து கிறாரே''”

Advertisment

rr

"ஆமாங்க தலைவரே, மலேசியாவில் உள்ள உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில், 11ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அங்குள்ள மலேயப் பல்கலைக் கழகத்தில் ஜூலை 21 முதல் 23ஆம் தேதி வரை, 3 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் டான்ஸ்ரீ மாரிமுத்து. இந்த ஆராய்ச்சி மாநாட்டுக்கு தனித்தியங்கி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பெருமை சேர்த்தவர் விழாவில் முக்கிய பொறுப்பு வகிப்பவரான நந்தா. இவருக்கு உறுதுணையாக இருப்பவர் சுப்பையா. இதுவரை இந்த மாநாடு, தமிழ்நாடு தொடங்கி, இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரீசியஸ் ஆகியவற்றில் நடந்திருக்கிறது. இப்போதைய மாநாட்டில் தமிழகம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் பல்துறை வித்தகர்களும் பங் கேற்க உள்ளனர். தமிழின் தொன்மை, தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கியம் உள்பட பல தலைப்புகளில் இதில் தமிழறி ஞர்கள் உரையாற்றுகின்றனர். இதில் புத்தகக் கண்காட்சி, நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடக்குது. இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி, தமிழக விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.''

"தமிழகத்தில் இருந்து வேறு யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள்?''”

"திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுபவீ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழறிஞர் பழ.கருப் பையா என பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். இவர்களில் சுபவீ, தற்காலத் தமிழ்க்கவிதைகள் குறித்துப் பேச, நம் நக்கீரன் ஆசிரியர், தமிழ் ஊடகங்கள் குறித்து உரை நிகழ்த்த இருக்கிறார். குங்குமம் சுந்தர்ராஜனோ, மணிப்பிரவாள நடையில் இருந்து நல்ல தமிழ் மொழிநடை, ஊடகங்களில் பிறக்கக் காரணமான திராவிடப் படைப்பாளிகள் குறித்து உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மலேசியப் பிரதமர் கலந்துகொள்கிறார். மாநாட் டுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன.''”

"சரிப்பா, பிரதமர் மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் 18ஆம் தேதி டெல்லியில் அவசர அவசரமாக நடந்திருக்கிறதே?''”

rr

Advertisment

"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 20ஆம் தேதி தொடங்குகிறது. சபையில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி சபையை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிடலாம் என்று பா.ஜ.க. பதட்டத்தில் இருக்கிறது. அதனால் சபையை சுமுகமாக நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 19ஆம் தேதி கூட்டியிருந்தார் சபாநாயகர். அந்தக் கூட்டத்திற்காக டெல்லி வரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களை தனியாக சந்தித்துப் பேச மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், மோடிக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பெங்களூர் கூட்டம் வலிமை அடைந்ததை அறிந்த மோடி, அவர்களின் கூட்டம் நடக்கும் அதே நாளான 18ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்தை வைத்துக்கொள்ளாம் என்று சொல்லி, அதன்படி முன்னதாகவே கூட்டத்தை அவசரகதியில் நடத்தியிருக்கிறார்.''”

"இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி, முழுக்க முழுக்க தி.மு.க.வை குறிவைத்து அட்டாக் செய்திருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,’எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வாரிசு அரசியல், ஊழல் அரசியல்’ என கடுமையாகத் தாக்கினார். குறிப்பாக, ’எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தி.மு.க.தான் பிரதானமாகவும், முக்கியமானதாகவும் இருப்பதால் தி.மு.க.வை குற்றம்சாட்டிப் பேசினார். ஆக, காங்கிரசை விட தி.மு.க.வைத்தான் முதல் எதிரியாக மோடி கருதுகிறார் என்று அந்தக் கூட்டத்திலேயே கமெண்ட் எழுந்திருக்கிறது. காங்கிரஸை விட, தி.மு.க.வைக் கண்டுதான் மோடி, அதிகம் பயப்படுகிறார் என்று தமிழகத்தில் இருந்து அந்தக் கூட்டத்திற்குச் சென்ற, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியினரே சொல்கிறார்கள்.''”

"அதேபோல் அவர்களின் ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு அதிக முக்கி யத்துவத்தை மோடி கொடுத்திருக்கிறாரே?''”

"மோடி கூட்டிய தேசிய ஜனநாயக கூட்டணியில் 32 கட்சிகள் கலந்துகொண்டன. தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. எடப்பாடி, த.மா.கா. வாசன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் பச்சமுத்து மற்றும் தேவநாதன், பாண்டிச்சேரி முதல்வர் ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 32 கட்சிகளில் அ.தி.மு.க.வுக்குதான் பெரியளவில் முக்கியத்துவம் தரப்பட்டது. அதாவது, தனது அருகிலேயே எடப்பாடியை மோடி நிற்க வைத்துக்கொண்டு, அவருக்கான முக்கியத்துவத்தை உணர்த்தினார். இதில் ரொம்பவே புளகாங்கிதம் அடைந்திருக்கிறாராம் எடப்பாடி. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தை அ.தி.மு.க.வுக்கு கொடுத்திருக்கிறார் மோடி. இது பரபரப்பாகப் பேசப்படுகிறது.''”

rr

"மோடி கூட்டிய இந்தக் கூட்டத்தை பா.ம.க. அன்புமணி புறக்கணித்துவிட்டாரே?''”

"ஆமாங்க தலைவரே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டும் பா.ம.க. அன்புமணி அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார். இதுபற்றி தைலாபுரத் தரப்பில் விசாரித்தபோது... தனக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து மோடி தரப்பிடம் இருந்து, எந்த ஒரு உத்தரவாத சமிக்ஞையும் இதுவரை தரப்படாததால், பா.ம.க. அன்புமணி கோபமடைந்திருக்கிறாராம். அதனால்தான் அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டாராம். இருப்பினும் ஒப்புக்கு, தங்கள் கட்சியின் சார்பில் ஏ.கே.மூர்த்தியை மட்டும் அனுப்பி வைத்தார்களாம். இது ஒருபுறமிருக்க, எடப்பாடியின் எதிர்ப்பால் ஓ.பி.எஸ்.ஸையும், ஜெகன்மோகன் ரெட்டியின் எதிர்ப்பால் சந்திரபாபு நாயுடுவையும் இந்தக் கூட்டத்திற்கு மோடி அழைக்காததில் அவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், தே.மு.தி.க. பிரேமலதாவும், அ.ம.மு.க. தினகரனும் தங்களை மோடி ஒரு பொருட் டாகவே கருதவில்லையே என்று புலம்புகிறார் களாம்.''”

"டெல்லி சென்ற எடப்பாடியை, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தனியாக சந்தித்துப் பேசியிருக்கிறாரே''”

"டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்ததும், ஓட்ட லில் தங்கியிருந்த எடப் பாடியை, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட் டாவும் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலும் சந்தித்து, ஏறத்தாழ, ஒருமணி நேரம் பேசியிருக்கிறார்கள். அப்போது, அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி நீடிப்பது குறித்து பல விசயங்கள் அலசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கூட்டணி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அ.தி.மு.க.வை டேமேஜ் பண்ணும் எந்த ஒரு விசயத்துக்கும் பா.ஜ.க. அப்ரூவல் தரக்கூடாது என்றும், குறிப்பாக, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க தி.மு.க. அரசு முயல்வதால், அது தொடர்பாக கோப்புகளில் தமிழக கவர்னரான ரவி கையெழுத்திடக்கூடாது என்றும், எடப்பாடி தரப்பில் இருந்து டிமாண்ட் வைக்கப்பட்டிருக் கிறது. ஆனால் ஜே.பி. நட்டாவோ, அதில் எப்படி ஒன்றிய அரசு தலையிட முடியும்? அதனால் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை நீங்கள்தான் எதிர்கொண்டாக வேண்டும் என்று எடப்பாடி யின் டிமாண்டை நிராகரித்துவிட்டாராம்.''”

"தங்கள் பலத்தைக் காட்டும் வகையில், பிரமாண்டமாக மாநாடு நடத்தும் தீவிரத்தில் எடப்பாடி இருத்தாரே?''”

"அந்த மாநாட்டுக்கு சில கோடிகள்வரை செலவாகும் என்று கணக்குப் போட்ட எடப்பாடி, கட்சி மாநாட்டுக்கான செலவுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி மாஜி மந்திரிகளான தங்கமணி, வேலுமணி, வீரமணி ஆகியோரிடம் கேட்டிருக்கிறார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான விஜய பாஸ்கரிடமும் இதுபோல் டிமாண்ட் வைத்திருக்கிறார். ஆனால் இவர்களில் எவரும் பணம் தரத் தயாராக இல்லை என்று கைவிரித்து விட்டார்களாம். இதனால் டெல்லியில் இருந்து உற்சாகமாக சென்னை வந்த எடப்பாடி, பலமாக அப்செட்டாகியிருக்கிறார் என்கிறார்கள்.''”

"அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோபப்பட்டாராமே?''”

"ஆமாங்க தலைவரே, ரெய்டு மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைகள் குறித்து அமைச்சர் பொன்முடியிடம் முதல்வர் ஸ்டா லின் விசாரித்திருக்கிறார். அப்போது பொன்முடி, "எனக்கு ஒன்றும் சிக்கலில்லை. என் மகன் கௌதமசிகாமணிக்குதான் சிக்கல். வீட்டில் 80 லட்சம் ரூபாய் இருந்ததையும், வங்கி இருப்பில் 42 கோடி இருந்ததையும் கண்டுபிடித்துக் குடைந்துவிட்டார்கள்' என்று சொல்லியிருக் கிறார். அதற்கு ஸ்டாலின், "செந்தில் பாலாஜி மீது நடவாடிக்கை பாய்ந்தபோதே உஷாராகி யிருக்க வேண்டாமா?' என்று சற்று காட்டமாகவே கண்டித்திருக்கிறார். ஏனைய அமைச்சர்களும் ஃபாரின் கரன்ஸியை எல்லாமா வீட் டில் வைத்திருப்பது? என் றெல்லாம் பொன்முடிக்கு அறிவுரைகளை வாரி வழங்கியிருக்கிறார்கள்.''”

"தமிழக காங்கிரஸ் தலைவராக தன் மகன் கார்த்திக் சிதம்பரத்தை உட்கார வைத்துவிட வேண்டும் என்று ப.சி., வரிந்துகட்டி நிற்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை விரைவில் மாற் றும் முடிவுக்கு வந்து விட்டாராம் ராகுல். அவரது சாய்ஸ், கரூர் எம்.பி. ஜோதிமணி தானாம். ஆனால் இதை கட்சியின் அகில இந் திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மாணிக்தாக்கூர் எம்.பி. உள்ளிட்ட பலரும் ஏற்க மறுத்துவருகிறார்களாம். இந்த நிலையில், தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தலைவர் பதவியைக் கேட்கும் சிதம்பரம், "என் மகனுக்கு எம்.பி. சீட்கூட வேண்டாம். அதேசமயம் அடுத் தாண்டு நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலிலும், 2026-ல் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட் பாளர்களின் செலவுகள் மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை நடத்துவதற்கு ஆகும் செலவு கள் என அனைத்தையும் நான் பார்த்துக்கொள் கிறேன்... அதனால் என் மகனை தலைவராக்குங் கள்' என சோனியாவிடம் வலியுறுத்தியிருக்கிறாராம்.''

"என் காதுக்கு வந்த தகவல் ஒன்றை நானும் பகிர்ந்துக்கறேன். தமிழகத்தில் உள்ள நாளிதழ் ஒன்று, தி.மு.க. செய்திகளைப் புறக்கணித்து வருகிறது. காரணம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் உதவியோடு 650 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறதாம் அதற்கு விசுவாசம் காட்டும் வகையில், தி.மு.க. குறித்த செய்திகளை அந்த நாளிதழ் வெளியிடுவதையே நிறுத்திவிட்டதாக பா.ஜ.க.வினர் பெருமையாக தமுக்கடிக் கிறார்கள்.''